கேரளாவில் களைகட்டும் ஓணம்: 5 நாட்களில் 324 கோடிக்கு மது விற்பனை

கேரளாவில் களைகட்டும் ஓணம்:   5 நாட்களில் 324 கோடிக்கு மது விற்பனை

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்களில் 324 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக அரசின் பெவ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கேரளாவில் ஓணம் பண்டிகை மட்டுமில்லாது சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உட்பட பண்டிகை நாட்களில் மது விற்பனை மற்ற மாநிலங்களை விட அதிகமாகவே இருக்கும். தற்போது ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கேரள அரசின் மதுபான விற்பனைக் கழகம் மூலம் 300-க்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகளில் விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கேரளாவில் 3 கோடியே 30 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில் இவர்களில் சுமார் 30 லட்சம் பேர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த 30 லட்சம் பேரில் 27 லட்சம் ஆண்களும், 3 லட்சம் பெண்களும் தினமும் மது அருந்துவதாக சொல்லப்படுகிறது. அதிலும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இம்மாநிலத்தில் தான் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கேரளாவின் அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகையையொட்டி மது விற்பனை மிக அதிகமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பிரச்சினை காரணமாக மது விற்பனை பெரிய அளவில் நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு மக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதால் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது." ஓணம் பண்டிகை தொடங்கிய முதல் 5 நாட்களில் மட்டும் கேரளா முழுவதும் மது விற்பனை சுமார் 30 சதவீதம் அதிகமாகியுள்ளது" என்று மாநில மதுவிற்பனை கழகத்தின்(பெவ்கோ) நிர்வாக இயக்குனர் யோகேஷ் குப்தா அறிவித்துள்ளார்.

மேலும், " கேரளாவில் கடந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கு மது விற்பனை ரூ.561 கோடிக்கு மட்டுமே நடைபெற்றது. ஆனால், ஆனால் இந்த ஆண்டு பண்டிகை தொடங்கிய முதல் 5 நாளிலேயே விற்பனை ரூ. 324 கோடியை தாண்டிவிட்டதாகவும், அதனால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கான மது விற்பனை ரூ. 700 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டும் மாநிலம் முழுக்க புதிதாக 96 மது விற்பனை கூடங்கள் திறக்கப்பட்டு உள்ளதால் இக்கடைகள் மூலமாக மது விற்பனை மேலும் அதிகரிக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in