எங்கள் தாய்மொழியை நேசிக்கிறோம்!

அமித் ஷாவிற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் நறுக் பதில்
எங்கள் தாய்மொழியை நேசிக்கிறோம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி திணிப்பு பேச்சுக்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அவர், " இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்திற்கு மாற்று இந்திதான். இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்திற்குப் பதில் இந்தி பேச வேண்டும். இந்தியை, ஆங்கிலத்துக்கு மாற்றான மொழியாக கொண்டு வரும் தருணம் வந்து விட்டது" என்று குறிப்பிட்டார்.

அவரின் இந்தப் பேச்சுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறுகையில், " உள்துறை அமைச்சரே, உங்களின் இந்தித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களின் பன்முகத்தன்மையை விரும்புகிறோம். எங்கள் தாய்மொழியையும் அடையாளத்தையும் நேசிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in