நிறையச் சம்பாதித்தோம், ஒற்றைத் துணியோடு திரும்பியுள்ளோம்: சூடானில் இருந்து தப்பிய தமிழர்கள் கண்ணீர்!

சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள்
சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள்நிறையச் சம்பாதித்தோம், ஒற்றைத் துணியோடு திரும்பியுள்ளோம்: சூடானில் இருந்து தப்பிய தமிழர்கள் கண்ணீர்!

நிறையச் சம்பாதித்தோம். ஆனால் அது எதுவுமே இல்லாமல் ஒரே ஒரு துணியுடன் தமிழகம் வந்துள்ளோம் என சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

சூடானில் திரும்பிய தமிழர்கள் பேட்டி
சூடானில் திரும்பிய தமிழர்கள் பேட்டிநிறையச் சம்பாதித்தோம், ஒற்றைத் துணியோடு திரும்பியுள்ளோம்: சூடானில் இருந்து தப்பிய தமிழர்கள் கண்ணீர்!

சூடான் நாட்டில் அந்த நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கும் இடையேயான சண்டை நடக்கிறது. அங்கு உள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காக 72 மணிநேர போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குச் சிக்கி உள்ள சுமார் 400 இந்தியர்களை வெளியேற்றுவதற்காக 'ஆபரேஷன் காவேரி" மீட்புப்’ பணியை மத்திய அரசு செய்து வருகிறது.

முதற்கட்டமாக மீட்கப்பட்ட 551 பேர் சூடான் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மற்றும் விமானம் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து 360 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட தனி விமானம் நேற்று இரவு 9.30 மணி அளவில் டெல்லியை வந்தடைந்தது. முதற்கட்டமாக அழைத்து வரப்பட்ட இந்தியர்களில் 9 தமிழர்கள் டெல்லி வந்தடைந்தனர். இதில் 5 பேர் சென்னை வந்தடைந்தனர். தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.

மீதமுள்ள 4 பேர் டெல்லியில் இருந்து நேரடியாக மதுரை சென்றனர். சூடானில் இருந்து மீட்கப்பட்டுள்ள தமிழர்களை அழைத்து வரும் செலவை தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.

சூடானில் இருந்து சென்னை திரும்பிய தமிழர்கள், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘’ கடந்த 15 நாட்கள் எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்தப் போர் காரணமாக எங்களுடைய கல்வி, அன்றாட வாழ்க்கை எல்லாமே பாதிக்கப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்டக் குழுக்களில் ஒன்று துப்பாக்கி முனையில் எங்களிடம் இருந்த பொருட்களைக் கொள்ளையடித்தனர்.

பல மணி நேரம் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர். மூன்று நாட்கள் வரை சாப்பிட உணவு இல்லாமல் பரிதவித்தோம். நிறையச் சம்பாதித்தோம். ஆனால், இன்றைக்கு ஒரே ஒரு துணியுடன் தமிழகம் வந்துள்ளோம். இந்தப் போர் எங்களுடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது’’ என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in