`32 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டோம்; இன்னும் திருப்தி இல்லையா?'- விடுதலையான நளினி வேதனை

`32 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டோம்; இன்னும் திருப்தி இல்லையா?'- விடுதலையான நளினி வேதனை

"32 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டோம். இன்னும் திருப்தி இல்லையா என்று நளினி வேதனையுடன் கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்தது போல் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நளினி உள்பட ஆறு பேரையும் விடுதலை செய்து நேற்று அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் மற்றும் புழல் சிறையில் இருந்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நளினி, 32 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்ட நிலையில் என்ன சந்தோஷம் உள்ளது என்று வேதனை தெரிவித்தார். சிறைச்சாலைகள் கொடுமைகளை அனுபவித்தேன் என்றும் 32 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டோம். இன்னும் திருப்தி இல்லையா என்றும் அவர் வேதனையை வெளிப்படுத்தினார்.

எனக்காக வாதாடிய எந்த வழக்கறிஞருக்கும் நான் காசு கொடுத்ததில்லை என்று கூறிய நளினி, நான் நானாகவே இருக்கிறேன் என்றும் தமிழக மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன் என்றும் கூறினார். மேலும் நான் சிறையில் இருந்து வெளியே வர இன்று வரை உடனிருந்து அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in