
'’தண்ணீர் வரி, சொத்து வரி, பராமரிப்பு கட்டணம் என பல வரிகளை கட்டுகிறோம். ஆனால் சுத்தமான குடிநீர், கழிப்பறை, மின்சார உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் தவிக்கின்றோம்’’ என வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுத்தொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு வியாபாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். அதில் ‘’ சிஎம்டிஏ நிர்வாகம் பல வாக்குறுதிகளை எங்களுக்கு அளித்தது. அதில் கோயம்பேடு வளாகத்தை வியாபாரிகளிடமே ஒப்படைப்பதாகக் கூறினார்கள். ஆனால் தற்போது வரை அதனை செய்யவில்லை. இதனால் வியாபாரிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளோம்.
கோயம்பேடு வளாகத்தை சுற்றி ஆக்கிரமிப்பு கடைகள் சூழ்ந்துள்ளன. அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்து வரி, தண்ணீர் வரி, பராமரிப்புக் கட்டணம் என அனைத்து வரிகளையும் கட்டுகிறோம். ஆனால் குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலை உள்ளது.
நாள்தோறும் 1 லட்சம் பேர் வந்து செல்லும் கோயம்பேடு வளாகத்தில் அவசரக்கால மருத்துவமனை, அவசரகால ஊர்தி என எதுவுமே இல்லாத நிலை உள்ளது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு சிஎம்டிஏ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" கோரிக்கை விடுத்துள்ளனர்.