ஆசிரியையின் வைரல் வீடியோ... குவியும் பாராட்டுகள்!

ஆசிரியையின் வைரல் வீடியோ... குவியும் பாராட்டுகள்!

மொத்த கேரள மக்களும் சிறப்பு ஆசிரியை ராஜீயைப் பாரட்டுகின்றனர். கடவுளின் தேசத்தில், கடவுளுக்கும் ஒரு படி மேலான சிறப்பு குழந்தைகளுக்கு பாடமெடுத்து வருகிறார் ஆசிரியை ராஜீ. மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள். குருவுக்கு அடுத்ததாக தான் தெய்வத்தைச் சொல்கிறோம். ஒரு குழந்தை, தன்னுடைய பெற்றோர்களை விட அதிக நேரத்தை ஆசிரியருடனும், நண்பர்களுடனுமே செலவிடுகிறது. குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு பெரிது.

அப்படி கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட சிறப்பு மாணவி ஒருவரை அந்த பள்ளியின் ஆசிரியை, பந்தய தூரம் முழுவதுமாக மாணவியின் கூடவே ஓடிச் சென்று கைதட்டி, உற்சாகப்படுத்துகிற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி, பலரது பாராட்டுக்களைப் பெற்று அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

கேரளம் மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள வைத்திரி கிராமத்தில் சிறப்பு குழந்தைகளுக்காக இயங்கும் பிஆர்சி பள்ளியில், குழந்தைகளை உற்சாகப்படுத்த ஓட்டப்பந்தயம் நடைப்பெற்றது. விசில் சப்தம் கேட்டதும், மாணவ, மாணவிகள் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வமுடன் ஓட துவங்கினார்கள். பள்ளியில் 3ம் வகுப்பு பயிலும் மாணவி பாத்திமா தியா மெஹாப் விசில் சப்தம் கேட்டதும் ஓடத் துவங்கி, பாதியில் நிற்க, பள்ளியின் சிறப்புக் கல்வியாளர் ராஜி, மாணவி பாத்திமாவைத் தொடர்ந்து கைத்தட்டி உற்சாகப்படுத்தி, மாணவியுடன் அவரும் சேர்ந்து பந்தய தூரம் வரை மாணவியை மகிழ்ச்சியுடன் ஓடி கடக்க செய்தார். சுற்றி நின்ற பெற்றோர்கள் நெகிழ்ச்சியில் கண்ணீர் மல்க ஆசிரியை ராஜீக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in