தண்ணீர் கேன்களுக்குச் சங்கிலிப் பூட்டு: தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர்த் தட்டுப்பாடு!

தண்ணீர் கேன்களுக்குச் சங்கிலிப் பூட்டு: தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர்த் தட்டுப்பாடு!

வட மாநிலங்களை வாட்டியெடுக்கும் வெப்ப அலையின் தொடர்ச்சியாக, தற்போது தண்ணீருக்குப் பற்றாக்குறை ஏற்படும் சூழலும் உருவாகியிருக்கிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் யமுனை ஆறு வற்றத் தொடங்கியிருக்கும் நிலையில், அங்குள்ள மக்கள் குடிநீருக்கு அலையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், குடிநீர் கேன்களை சங்கிலியில் பிணைத்துப் பாதுகாக்கும் அளவுக்கு அங்கு நிலவரம் மோசமடைந்திருக்கிறது.

வாஸிராபாத் பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீர் பெருமளவு வற்றிவிட்டதாகவும், யமுனை நதி ஏறத்தாழ வற்றிவிட்டதாகவும் டெல்லி குடிநீர் வாரியம் (டிஜேபி) அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வடக்கு டெல்லி, வட மேற்கு டெல்லி, மேற்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லியின் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் டெல்லி குடிநீர் வாரியம் அறிவித்திருக்கிறது. யமுனை ஆற்றில் கூடுதலாக நீரைத் திறந்துவிடுமாறு ஹரியாணா நீர்ப்பாசனத் துறைக்கு டெல்லி குடிநீர் வாரியம் பல முறை கடிதம் எழுதியிருக்கிறது.

இந்தச் சூழலில், டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள குஸும்பூர் பகாரியில் வசிக்கும் மக்கள், தண்ணீர் லாரிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரை நிரப்பிவைத்திருக்கும் தண்ணீர் கேன்களைச் சங்கிலியில் பிணைத்துவைத்திருக்கிறார்கள். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. தண்ணீர் பிடிப்பதில் அக்கம்பக்கத்தினரிடையே தகராறு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in