காந்தியிடம் மன்னிப்புக் கோரியே ‘ஹேராம்’ படத்தை எடுத்தேன்: ராகுல் காந்தியிடம் மனம் திறந்த கமல்!

காந்தியிடம் மன்னிப்புக் கோரியே ‘ஹேராம்’ படத்தை எடுத்தேன்: ராகுல் காந்தியிடம் மனம் திறந்த கமல்!

பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான் கிளிக் செய்த புலியின் புகைப்படத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பரிசளித்துள்ளார்.

டெல்லியில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தியுடன் கமல்ஹாசனும் இணைந்தார். அதன் அடுத்தநாளே ராகுல் காந்தியின் வீட்டில் அவரை கமல்ஹாசன் சந்தித்தார். இந்த நிலையில், இருவரும் உரையாடிய வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட இந்த உரையாடலில், பிரியங்கா காந்தியின் மகன் கிளிக் செய்த புலி தண்ணீர் குடிக்கும் பெரிய உருவப்படத்தை கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி பரிசளித்தார். அப்போது, "இது உங்கள் அணுகுமுறை மற்றும் வாழ்க்கையைப் பற்றிய மனப்பான்மையைச் சொல்கிறது. மேலும் நீங்கள் ஒரு சிறந்த இந்தியன் மற்றும் ஒரு சிறந்த சாம்பியன் என்ற உண்மையை இது நமக்குச் சொல்கிறது" என்று கமல்ஹாசனிடம் ராகுல் காந்தி இந்த புகைப்படத்தை திறந்து வைத்தபோது சொன்னார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் உரையாடியபோது, மகாத்மா காந்தியைப் பற்றி தற்போது அதிகம் பேசுவதாகவும், ஆனால் தனது சூழல் காரணமாக பதின்ம வயதிலேயே தேசத் தந்தையை கடுமையாக விமர்சித்ததாகவும் கூறினார். மேலும், "சுமார் 24-25 வயதில் நானே காந்தியை கண்டுபிடித்தேன். அதிவேகமாக நான் அவரின் ரசிகனாகிவிட்டேன். அதனால்தான் நான் ஹே ராம் படத்தை உருவாக்கினேன். மன்னிப்பு கேட்பதற்கு அதுதான் என் வழி" என்று கமல்ஹாசன் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in