இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் மீட்பு!

இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் மீட்பு!
Updated on
1 min read

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், அங்கிருந்து மேலும் 235 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்.

இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையே 8-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இருதரப்பிலும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நேற்று முதல்கட்டமாக 212 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி திரும்பினர்.

அவர்களில் 21 தமிழர்கள் சென்னை மற்றும் கோவை விமான நிலையத்திற்கு வந்து அவர்களது ஊர்களுக்கு சென்றனர். இந்நிலையில் இன்று இரண்டாவது குழுவில் 235 இந்தியர்கள் டெல்லி திரும்பியுள்ளனர்.

ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தின் மூலம் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2-வது மீட்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது.

டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய அமைச்சர் ராஜ்குமார் ராஜன்சிங் நேரில் சென்று வரவேற்றார். இதன் மூலம் இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டோர் எண்ணிக்கை 447 ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. இதனிடையே இஸ்ரேல் – ஹமாஸ் போரானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in