400 டான்சர்களுடன் முதல் முறையாக தீபாவளி கொண்டாடியது மிக்கி மவுஸ்

டிஸ்னி கொண்டாட்டம்
டிஸ்னி கொண்டாட்டம்

அமெரிக்காவின் புளோரிடாவில் அமைந்துள்ள வால்ட் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்காவில் முதல் முறையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

உலகின் மிகவும் மகிழ்ச்சியான இடம் என்றும், நம்.1 பொழுதுபோக்கு தலம் என்றும் புகழ்பெற்றிருப்பது வால்ட் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா. இதன் வரலாற்றில் முதல்முறையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆடல் பாடல்கள் கூடிய ஒளியின் திருவிழாவை, அமெரிக்க பார்வையாளர்களுக்காக வால்ட் டிஸ்னி உற்சாகமாக கொண்டாடி உள்ளது.

டிஸ்னி கொண்டாட்டம்
டிஸ்னி கொண்டாட்டம்

டிஸ்னி ஸ்பிரிங்ஸ் மற்றும் டிஸ்னியின் அனிமல் கிங்டம் தீம் பார்க் ஆகியவற்றில் தீபாவளி பண்டிகை மற்றும் இந்தியாவின் பெருமை மிகு பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் அமெரிக்கா மட்டுமன்றி இந்தியாவை சேர்ந்த பாரம்பரிய மற்றும் நவீன இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர். ஜாஷ்ன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இதற்கான பணிகளை ஒருங்கிணைத்திருந்தது.

3 நாள் நிகழ்வாக நடந்து முடிந்திருக்கும் இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் தங்கள் திறமையை, உலகப் புகழ்பெற்ற வால்ட் டிஸ்னியின் மேடையில் வெளிப்படுத்தும் வாய்ப்பை பெற்றிருந்தனர். வால்ட் டிஸ்னியின் அடையாளங்களான மிக்கி மவுஸ் மற்றும் மின்னி மவுஸ் ஆகியோர் சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளுடன் சேர்ந்து பார்வையாளர்களை குஷிப்படுத்தின.

டிஸ்னி கொண்டாட்டம்
டிஸ்னி கொண்டாட்டம்

வால்ட் டிஸ்னி வரலாற்றிலும் அதன் புகழ்பெற்ற மிக்கி மவுஸ் கதாப்பாத்திரங்கள் மத்தியிலும் முதல் முறையாக தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. இவை தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வலம்வர ஆரம்பித்திருக்கின்றன. அவை அமெரிக்கர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்ததில், இதர வணிக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்கள் மத்தியிலும் தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!

தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!

திடீர் பரபரப்பு.. ரத்த சிவப்பாய் மாறிய கடல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in