குறவன் - குறத்தி ஆட்டம் என்ற பெயரில் ஆபாச நடனங்களை அனுமதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

குறவன் - குறத்தி ஆட்டம் என்ற பெயரில் ஆபாச நடனங்களை அனுமதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாச நடனமாடுவதை அனுமதிக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

குறவன், குறத்தி நடனம் என இணைய தளத்தில் தேடும்போது ஆபாச நடன காட்சிகள் வருகிறது. குறவன், குறத்தி என்ற பெயரில் இணையதளங்களில் உள்ள ஆபாச நடனங்களை நீக்க வேண்டும் எனவும் மனுதாரர் வேண்டுகோள் விடுத்திருத்திருந்தார். இம்மனு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழகத்தில் ஆடல், பாடல் நிகழ்வுகளில் குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாச நடனமாடுவதை அனுமதிக்கக்கூடாது. குறவன், குறத்தி நடனம் என ஆபாச நடனமாடினால், இது குறித்து புகாரளிக்க தனிப்பிரிவு உருவாக்க வேண்டும். ஆடல், பாடல் நிகழ்வுகள் குறவர் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் இருந்தால், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in