பெயர், முகவரி மாற்றம் செய்ய இன்றே கடைசி: விறுவிறுப்புடன் நடந்த வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்!

பெயர், முகவரி மாற்றம் செய்ய இன்றே கடைசி: விறுவிறுப்புடன் நடந்த வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்!

தமிழ்நாட்டில் வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாள் என்பதால் புதிய வாக்களார்கள், பெயர், முகவரி மாற்றத்துக்கு சிறப்பு முகாமில் பொதுமக்கள் குவிந்தனர்.

கடந்த 9-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடந்து வருகிறது. வாக்காளர்கள் வசதிக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கடந்த 12, 13-ம் தேதிகளிலும், நேற்றும் நவம்பர் 26-ம் தேதி) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் சிறப்பு முகாம் நிறைவடைகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் கோரி விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தங்கள் பெயருடன் இணைக்க ஆதார் எண்ணை அளிக்கலாம். 2023 ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்களும், பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்க இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டு கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 2-வது நாளாக வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பெருமாள்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது, சிறப்பு முகாமின் கண்காணிப்பாளர் மஞ்சுளா (பட்டதாரி ஆசிரியை), ரயில் நகர் வார்டு உறுப்பினர் ஜென்சன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த சிறப்பு முகாமில் ரயில் நகர், ஐஓபி நகர், ரமணா நகர், எம்எல்ஏ தெரு, எஸ்.வி.நகர், முல்லைநகர், ஓம் சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்து பயன் பெற்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in