ஆயுத பூஜை விடுமுறையில் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்குமா?

ஆயுத பூஜை விடுமுறையில் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்குமா?

ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்குத் திறந்திருக்கும் எனப் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சிறுவர்களுக்கான முக்கியப் பொழுதுபோக்கு இடங்களில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் முக்கியமானது. இந்த பூங்காவில் பராமரிக்கப்படும் யானை, சிறுத்தை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளைப் பார்த்து மகிழ்வதற்காக பொது மக்கள் பூங்காவிற்கு வருவார்கள். விடுமுறை தினங்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவிற்கு வருவார்கள். இதனால் வழக்கமாகச் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் உயிரியல் பூங்கா திறந்தே இருக்கும். விலங்குகள் ஓய்வெடுப்பதற்காகவும், பராமரிப்பு பணிக்காகவும் வண்டலூர் பூங்காவிற்கு செவ்வாய் தோறும் விடுமுறை அளிக்கப்படும்.

இந்த ஆண்டு ஆயுத பூஜை செவ்வாய்க் கிழமையில் வருகிறது. பொதுவாகச் செவ்வாய்க் கிழமைகளில் பூங்கா விடுமுறை என்பதால் பூங்கா திறந்திருக்குமா என்ற குழப்பம் பொதுமக்களிடையே நிலவி வந்தது. இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை திருநாள் கொண்டாடப்படும் நிலையில்,  வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம் போலச் செயல்படும் எனப் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in