இப்போதே விராட் கோலி ஓய்வை அறிவிக்க வேண்டும்: பாகிஸ்தான் முன்னாள் வீரர் திடீர் கோரிக்கை

இப்போதே விராட் கோலி ஓய்வை அறிவிக்க வேண்டும்: பாகிஸ்தான் முன்னாள் வீரர் திடீர் கோரிக்கை

புகழின் உச்சத்தில் இருக்கும்போதே விராட் கோலி ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் ஜாம்பவனான ஷாஹித் அப்ரிடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2022 ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 ஸ்டேஜில் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் 71வது சதம் உதவியது. இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் ஷாஹித் அப்ரிடி, கோலி ஓய்வு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அஃப்ரிடி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “விராட் விளையாடிய விதம், அவர் தனது வாழ்க்கையின் தொடக்கம், அவர் தனக்கென ஒரு பெயரை உருவாக்குவதற்கு முன்பு போராட்டங்களைச் சமாளித்து கடினமாக உழைத்தார். அவர் ஒரு சாம்பியன் மற்றும் நீங்கள் ஓய்வு பெறும் போது ஒரு நிலை வரும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அணியில் இருந்து நீக்கப்படும் நிலையை இது எட்டக்கூடாது. அதற்கு பதிலாக, நீங்கள் புகழின் உச்சத்தில் (பார்மில்) இருக்கும்போது ஓய்வு அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in