விராட் கோலியின் புதிய சாதனை; டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்!

விராட் கோலி
விராட் கோலிவிராட் கோலியின் புதிய சாதனை; டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்கின் டெஸ்ட் ரன் எண்ணிக்கையைத் தாண்டி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன் எடுத்த 5 வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அடுத்ததாக முதல் இன்னிங்சில் ஆடிவரும் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் 36 ரன்களுடன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 8,515 ரன்களை குவித்து சேவாக்கின் சாதனையை முந்திய உள்ளார். 

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்கள் குவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து 'இந்தியாவின் சுவர்' என்று செல்லமாக அழைக்கப்படும் ராகுல் டிராவிட் 13,265 ரன்களுடன் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரரான சுனில் கவாஸ்கர் 10,122 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். தடுப்பு ஆட்டத்தில் புகழ்பெற்ற விவிஎஸ் லட்சுமண் 8,781 ரன்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இடையில் ரன்கள் எடுப்பதில் சில தடுமாற்றம் இருந்தாலும், கோலி தற்போது மீண்டும் ஃபார்முக்கு திரும்பி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார், அவரது சராசரி 52.04 ஆக உள்ளது. கோலி டெஸ்ட் போட்டிகளில் 28 சதங்கள் மற்றும் 28 அரை சதங்கள் அடித்துள்ளார். அவர் விரைவில் விவிஎஸ் லட்சுமணனின் 8,781 ரன்களைக் கடந்து நான்காவது இடத்திற்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in