பெரும் பதற்றம்.. காவல் நிலையம் மீது தாக்குதல்... வாகனங்களுக்கு தீவைப்பு... கண்டதும் சுட உத்தரவு!

வன்முறையில் பற்றி எரியும் தீ
வன்முறையில் பற்றி எரியும் தீ

உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு இருந்த மதரஸா இடிக்கப்பட்டதால் வன்முறை வெடித்தது. இதன் காரணமாக வன்முறையாளர்களை கண்டதும் சுடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார்
தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  நாட்டிலேயே முதல் முறையாக பொதுசிவில் சட்ட மசோதா அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே உத்தரகாண்ட் தேசிய அளவில் கவனிக்கப்படும் மாநிலமாக மாறியுள்ளது.

இந்நிலையில், நேற்று  ஹல்ட்வானி பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. பன்புல்புரா காவல் நிலையம் அருகே உரிய அனுமதி இன்றி சட்ட விரோதமாக  கட்டப்பட்டு இருந்த  மதரஸாவை நகராட்சி அதிகாரிகள் இடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகள் மீது  கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் காவல் நிலையத்தை சூழ்ந்து கொண்டு ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாகவும் இதில், போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.  இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் போலீஸார்  வரவழைக்கப்பட்டுள்ளனர். 

அங்குள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்றிற்கும் மர்ம நபர்கள் தீ வைத்ததால் அந்த பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியில் வராமல் முடங்கியுள்ளனர். கல்வீச்சு சம்பவத்தில் போலீஸார் மட்டுமல்லாது பத்திரிகையாளர்களும் காயம் அடைந்தனர்.  பொதுமக்கள் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in