மணிப்பூரில் அடுத்த துயரம்... வேகமாக பரவும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்; அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்

மணிப்பூரில் பன்றிகளிடையே வேகமாக பரவும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்
மணிப்பூரில் பன்றிகளிடையே வேகமாக பரவும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்

கலவரத்தால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வரும் மணிப்பூர் மாநிலத்திற்கு அடுத்த தலைவலியாக டெங்கு மற்றும் ஆபிரிக்க பன்றி காய்ச்சல் நோய்கள் மாறி உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தொடர் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், கலவரத்தின் தாக்கத்திலிருந்து மெல்ல மணிப்பூர் மீண்டு வருகிறது.

இதனிடையே, மணிப்பூர் மாநில மக்களுக்கு அடுத்த தலைவலியாக நோய் தொற்று உருவாகியுள்ளது. குறிப்பாக டெங்கு காய்ச்சலின் அதிகரிப்பு அம்மாநில மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை திடீரென 1,338 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.

டெங்கு கொசு
டெங்கு கொசு

கடந்த காலங்களில் ஏற்பட்ட நோய் தொற்றை காட்டிலும் இது மிகவும் அதிகமாகும். இதுவரை 5 பேர் டெங்குவுக்கு உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் தொடர்ந்து டெங்குவின் பரவல் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தலைநகர் இம்பாலின் மேற்கு இம்பால் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 3 பேர் உயிரிழந்த நிலையில், 898 பேர் மருத்துவமனைகளில் டெங்குவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில நாட்களாக வளர்ப்பு பன்றிகளின் இறப்பு எண்ணிக்கையும் திடீரென அதிகரித்ததால் இது தொடர்பாக கால்நடைத்துறை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் உயிரிழந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கு இம்பால் மாவட்டத்தில் பன்றிகளை கொண்டு செல்லவும், பன்றி இறைச்சியை விற்பனை செய்யவும் மணிப்பூர் அரசு தடை விதித்துள்ளது.

பன்றி
பன்றி

இதுவரை 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பன்றிகள் இறந்துள்ள நிலையில், பன்றி இறைச்சி வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பன்றி பண்ணையாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த நோய் மனிதர்களுக்கு பரவாது என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், பன்றிகளிடையே நோய் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் தம்பதி கைது!

குட் நியூஸ்... ரூ.400க்கு சமையல் சிலிண்டர்; ரூ.5 லட்சம் காப்பீடு; முதல்வர் அறிவிப்பு!

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் படையின் 2வது தளபதி பலி!

புது கெட்டப்பில் விஜய்சேதுபதி... வைரலாகும் வீடியோ!

இன்று காலை தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in