மணிப்பூரில் நிவாரண முகாமில் வசிக்கும் பெண்
மணிப்பூரில் நிவாரண முகாமில் வசிக்கும் பெண்

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள்; தேர்தலால் பலன் கிடைக்குமா?

மணிப்பூரில் இன வன்முறையால் பாதிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான மக்கள் அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மீது முகாம்களில் வசிக்கும் மக்கள் ஆர்வமின்றி உள்ளனர்.

உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் மக்களவை தொகுதிகள்
உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் மக்களவை தொகுதிகள்

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மெய்டேய் மற்றும் குக்கி பழங்குடி சமூகத்தினருக்கு இடையே இன ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வன்முறையால் அம்மாநிலத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகாரிகள் வெளியிடட்டுள்ள தகவல்படி, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், வன்முறை பகுதிகளிலிருந்து பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அமைதியின்மை நிலவுவதால் சுமார் 50 ஆயிரம் பேர் முகாம்களில் வசித்து வருகின்றனர்.

இச்சூழலில் அம்மாநிலம் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. மணிப்பூரில் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. உள் மணிப்பூர் தொகுதிக்கு ஏப்ரல் 19ம் தேதியும், வெளி மணிப்பூர் தொகுதிக்கு ஏப்ரல் 19 மற்றும் 26ம் தேதியும் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

மெய்டேய் சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் உள் மணிப்பூர் தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவும், பழங்குடியினரான குக்கி சமூகத்தினர் வசிக்கும் வெளி மணிப்பூர் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியான நாகா மக்கள் முன்னணி (என்பிஎப்) கட்சியும் வெற்றி பெற்றிருந்தன.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

இந்நிலையில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றியை தக்கவைக்க முயற்சிக்கிறது. ஆனால், இன ரீதியான வன்முறைக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அங்கு கடும் சவாலை அளித்து வருகின்றன.

இதற்கிடையே வன்முறையால் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கேயே வாக்களிக்கும் வகையில் சிறப்பு பூத்களை அமைக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. இருப்பினும், அமைதியின்மை நிலவும் சூழலில் தேர்தல் குறித்து தங்களால் இயல்பாக சிந்திக்க இயலவில்லை என முகாம்களில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இம்பால் நிவாரண முகாமில் வசிக்கும் நங்கன்தோய்பி என்பவர் கூறுகையில், "நாங்கள் அனைவரும் இங்கு அகதிகளாக இருக்கிறோம். எங்கள் மனம் முழுவதும் நிச்சயமற்ற எதிர்காலத்தைப் பற்றிய கவலையால் நிரம்பியுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு செல்லும் மக்கள் (கோப்பு படம்)
வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு செல்லும் மக்கள் (கோப்பு படம்)

நாங்கள் பிரச்சினைகளுக்கு நடுவில் இருக்கிறோம். எனவே தேர்தலைப் பற்றி சிந்திக்க இது சரியான நேரம் இல்லை. இனி எங்கள் தலைவர்களை நாங்கள் நம்ப மாட்டோம். அவர்கள் எங்களுக்காக எதுவும் செய்யவில்லை " என்றார்.

இதேபோல் சுராசந்த்பூரிலிருந்து இடம்பெயர்ந்த லுலுன் என்பவர் கூறுகையில், "எங்கள் வாக்குகளுக்கு இப்போது எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் 10 மாதங்களுக்கும் மேலாக இடம்பெயர்ந்துள்ளோம். எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை" என்றார்.

இது தொடர்பாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி பி.கே.ஜா கூறுகையில், "எங்கள் பணியாளர்களும் இடம்பெயர்ந்துள்ளனர். எண்ணிக்கையிலான தேர்தல் பணியாளர்களுடன் இரண்டு கட்டங்களாக தேர்தல்களை நடத்த உள்ளோம். தேர்தலுக்கு போதுமான ஊழியர்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்." என்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in