2 மாதங்களில் 2 கோடி அபராதம் வசூல்: விதிமீறிய வாகன ஓட்டிகள் மீது நெல்லை போலீஸ் அதிரடி

போக்குவரத்து போலீஸார் சோதனை
போக்குவரத்து போலீஸார் சோதனை2 மாதங்களில் 2 கோடி அபராதம் வசூல்: விதிமீறிய வாகன ஓட்டிகள் மீது நெல்லை போலீஸ் அதிரடி

விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து திருநெல்வேலி மாநகரில் மட்டும் இரண்டு மாதங்களில் 2 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக ராஜேந்திரன் பதவி ஏற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார். அதிலும் குறிப்பாக லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுவது, மது போதையில் வாகனம் ஓட்டுவது ஆகியவற்றிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்துத் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “நெல்லை மாநகரத்தில் இருசக்கர வாகனத் திருட்டுக்களை சிசிடிவி கேமரா உதவியுடன் கண்டுபிடித்து வருகிறோம். இவ்விவகாரத்தில் நேற்றே இருவரைக் கைது செய்தோம். அவர்களிடம் இருந்து 22 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை சாலை விதிகளை உரியமுறையில் பின்பற்றாத 1600 பேரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்துசெய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர காவல் எல்லையில் கடந்த இருமாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 23 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் 2 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 60 லட்சம் ரூபாய் நேரடியாக வசூலிக்கப்பட்டது. மீதத்தொகையை நீதிமன்றம் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in