விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: இறைச்சி, பிரியாணி கடைகளை மூட காவல்துறை உத்தரவு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: இறைச்சி, பிரியாணி கடைகளை மூட காவல்துறை உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 2, 4 தேதிகளில் இறைச்சி, பிரியாணி கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தமிழக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் 5,200 விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. இதையடுத்து, இந்து அமைப்புகள் விநாயகர் சிலையை அமைக்கும் பணியில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பண்டிகை முடிந்த பிறகு செப்டம்பர் 2, 4 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து கரைக்கப்பட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 2, 4 தேதிகளில் இறைச்சிக்கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கழுநீரோடை வீதி, சங்கரமடம் ஆகிய பகுதிகளில் வருகிற 31-ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இருப்பதாலும், செப்டம்பர் 2,4 ஆகிய தேதிகளில் சிலைகள் கரைக்கப்பட உள்ளதால் செங்கழுநீரோடை வீதி மற்றும் சங்கரமடம் அருகில் உள்ள இறைச்சி கடை மற்றும் பிரியாணி கடைகளை மேற்கண்ட தினங்களில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டி மேற்கண்ட இருதினங்களுக்கு தங்களது கடையை மூடி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in