`விடுமுறையாக இருந்தாலும் பள்ளிக்கு செல்லுங்கள்'- ஆசிரியர்களுக்கு ஆட்சியர் உத்தரவு

ஆட்சியர் மோகன்
ஆட்சியர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பள்ளி தொடர்பான பணிகளை மேற்கொள்ள  வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

மேன்டூஸ் புயல்  காரணமாகவும், அதன்பின்னரும் தொடரும் மழை காரணமாகவும்,  கடந்த சில தினங்களாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் இன்றும் மழை தொடர்வதால்  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்த அவரது உத்தரவில், 'தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று பள்ளி தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளியில் கட்டிடங்களின் நிலைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும், பள்ளி வளாகத் தூய்மை, குடிநீர், மழைநீர் தேக்கம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள  பயன்படாத  பழைய கட்டிடங்களின் நிலை குறித்து உயர் அலுவலர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பள்ளி நிர்வாகம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in