ஆன்லைன் ரம்மியால் லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை: பெற்றோருக்கு உருக்கமான மெசேஜ்

ஆன்லைன் ரம்மியால் லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை: பெற்றோருக்கு உருக்கமான மெசேஜ்

விளாத்திகுளத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஒரு லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழக்கும் நபர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தொடர்பான தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து திமுக ஆட்சியில் ஆன்லைன் தடை சட்டத்தை கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துக்களை கேட்டு முதல்வர் ஸ்டாலிடம் அண்மையில் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூடி ஆன்லைன் தடைச் சட்டம் தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் விளையாட்டு மசோதா தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார். தற்போது இந்த தடை சட்டம் அமுலில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் ஆன்லைன் தொடர்பான விளையாட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

விளாத்திகுளம் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த பூபதிராஜா என்ற இளைஞர் தனியார் பவர் பிளாண்டில் வேலை செய்து வந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான இவர், ஒரு லட்ச ரூபாயை இழந்துள்ளார். இதனால் அவர் வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பூபதிராஜா தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலைக்கு முன்னால் பெற்றோருக்கு உருக்கமாக வாட்ஸ் அப்பில் வாட்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்பி விளையாட்டு தடைச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் ரம்மி விளையாடி வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in