விகடன் குழும இயக்குநரின் தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

விகடன் குழும இயக்குநரின் தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

விகடன் குழுமத்தின் இயக்குநர் சீனிவாசன் அவர்களின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னாள் முதல்வர்கள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விகடன் குழுமத்தின் இயக்குநர் சீனிவாசன் அவர்களது தாயாரும், அமரர் பாலசுப்ரமணியன் அவர்களின் துணைவியாருமான திருமதி. சரோஜா பாலசுப்ரமணியன் அவர்கள் இன்று காலையில் உயிரிழந்தார். இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், “விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு. சீனிவாசன் அவர்களது தாயாரும், அமரர் பாலசுப்ரமணியன் அவர்களின் துணைவியாருமான திருமதி. சரோஜா பாலசுப்ரமணியன் அவர்கள் இன்று காலையில் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வேதனையடைந்தேன். அன்பு அன்னையை இழந்துவாடும் சீனிவாசன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அவரின் மறைவிற்கு தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in