
’’இந்த ஆண்டு இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் நிறைவடைந்து, நடிகர் விஜயகாந்திற்கு பாராட்டு விழா நடத்தப்படும்’’ என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நடிகர் விஷால் தெரிவித்தாவது, ‘’அதிர்ஷ்டவசமாக ’மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு தளத்தில் உயிர் தப்பினேன். அனைவருமே கவனமாகத்தான் இருந்தோம். ஆனாலும் விபத்து நடந்துவிட்டது. நடிகர் சங்கம் கட்டிடத்தை பொறுத்தவரை இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் நிறைவடையும்.
நடிகர் சங்க கட்டிடத்தைப் பொறுத்தவரை அதற்கான பத்திரத்தை மீட்டுக் கொடுத்தவர் கேப்டன் தான். அதனால் கட்டிடப் பணிகள் நிறைவடைந்தவுடன் முதல் விழாவாக, கேப்டனுக்கான பாராட்டு விழா அங்கே நடத்தப்படும்’’ என்றார்.