விஜய் சேதுபதி நடித்த 'ஃபார்ஸி' வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீடு

 ஷாகித் கபூருடன், விஜய் சேதுபதி.
ஷாகித் கபூருடன், விஜய் சேதுபதி.

நடிகர் விஜய் சேதுபதியுடன், பாலிவுட் நடிகர்ஷாகித் கபூர்இணைந்து நடித்திருக்கும் 'ஃபார்ஸி' வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான 'ஃபார்ஸி' வெப்சீரிஸின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, கிரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே.கே.மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமேசான் பிரைம் வீடியோவின் தொடரான 'ஃபார்ஸி', பிப்.10-ம் தேதி முதல் இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

இந்த வெப் சீரிஸின் பிரைம் வீடியோ இன்று வெளியிட்டது. எட்டு அத்தியாங்களைக் கொண்ட தொடராக உருவாக்கப்படட 'ஃபார்ஸி ' பிரம்மாண்ட முறையில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், " குறும்படமோ, தொடரோ அனைத்துமே காட்சிகளுக்கு உயிர் கொடுப்பது தான். ராஜ் மற்றும் டிகே என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரு நடிகராக எனக்கு முழு சுதந்திரமும் இந்த தொடரில் இருந்தது. ஷாஹித் கபூருடன் நடித்தது, சிறந்த அனுபவமாக இருந்தது. ராஷி கண்ணாவுடன் நடிக்கும் போது அந்த காட்சியே ஒரு தனித்துவமான ரிதமில் இருக்கும். அவருடன் திரையை பகிர்வது எப்போதும் மகிழ்ச்சி தான். இந்த தொடர் ஒரு கூட்டுமுயற்சியால் உருவாகியுள்ளது. தொடர் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் ''என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in