காதலியுடன் வீடியோ காலில் பேசிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி திடீர் தற்கொலை

காதலியுடன் வீடியோ காலில் பேசிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி திடீர் தற்கொலை

தாம்பரம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை தாம்பரம் அடுத்த புலிகொரடு பகுதியை சேர்ந்தவர் விஜய் கருப்பசாமி (27). லாரி ஓட்டுநராக இருந்து வந்த இவர், தாம்பரம் மேற்கு பகுதி 32-வது வார்டு விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தாயார் சின்னமாவிடம் போதையில் சண்டைப்போட்டுவிட்டு திருநீர் மலையில் வசித்து வந்தார். அப்போது பள்ளி மாணவி ஒருவரை கருப்பசாமி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கருப்பசாமி நேற்று அதிகாலை அந்த மாணவியுடன் போதையில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென தனது தாயார் வருவதாகக் கூறி போன் அழைப்பை துண்டித்துள்ளார். பின்னர் அந்த மாணவி சிறிது நேரத்துக்கு பிறகு கருப்பசாமியை செல்போனில் அழைத்துள்ளார். நீண்ட நேரம் செல்போன் அடித்துக் கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காதலி, இது குறித்து கருப்பசாமியின் பெற்றோர், அண்ணனிடமும் தகவல் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது கருப்பசாமி தூக்கில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தாம்பரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகினர். நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in