பத்திரப்பதிவு கூடுதல் ஐ.ஜி சீனிவாசன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!

பத்திரப்பதிவு கூடுதல் ஐ.ஜி சீனிவாசன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!

தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் 2016 -2022-ம் ஆண்டு காலத்தில் மிகப்பெரிய பத்திரப்பதிவு மோசடி மற்றும் ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார் கொடுக்கப்பட்டது.

அதில், ‘உச்ச நீதிமன்றக் குழு தடை போட்ட 5,300 ஏக்கர் PACL நிலங்களை மோசடியாகத் தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் விற்பனை செய்ய உதவி இருக்கிறார்கள். பத்திரப்பதிவு துறை கூடுதல் ஐஜி கே.வி. சீனிவாசன் உள்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, தற்போதைய அமைச்சர் மூர்த்தி, இத்துறையின் அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற குழுவால் முடக்கப்பட்ட பிஏசிஎல் சொத்துகளை முறைகேடாக விற்க உதவிய புகாரில் பத்திரப்பதிவு கூடுதல் ஐஜி சீனிவாசன் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கே.வி. சீனிவாசன் செய்த முறைகேடுகளை பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in