அதிக ஒலி எழுப்பி விரட்டிய வனத்துறையினர்; குட்டியை பாதுகாக்க ஓடி வந்த யானை: அதிர்ந்துபோன விவசாயிகள்

பயந்து ஓடும் காட்டு யானை
பயந்து ஓடும் காட்டு யானை

வனத்துறையினர் அதிக ஒலி எழுப்பி காட்டு யானையை விரட்டியதால் குட்டியை பாதுகாக்க வேகமாக ஓடும் தாய் யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வனத்துறையினர் வாகனத்தில் அதிக ஒலி எழுப்பிய படியும், கூச்சலிட்டும் காட்டு யானையை விரட்டும் காட்சிகளும். இதனால், மிரண்ட காட்டு யானை தனது குட்டி யானையைப் பாதுகாக்க வேகமாக ஓடும் வீடியோக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓடும் தாய் யானையின் முன்பாகவே குட்டி யானையும் சேர்ந்து ஓடும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ குறித்து விசாரித்த போது, தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலமான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் கீழ்மலை பகுதிகளான பன்றி மலை, கே.சி. பட்டி, தாண்டிக்குடி, உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களையும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தியும், அவ்வப்போது, விவசாயிகளையும் தாக்கி வருவதாக தெரியவந்தது.

தாய் யானைக்கு முன்பாகச் செல்லும் குட்டி யானை
தாய் யானைக்கு முன்பாகச் செல்லும் குட்டி யானை

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் மலைச்சாலைக்கு வந்த காட்டு யானையை, வனத்துறையினர் விரட்ட முடிவு செய்தனர். தொடர்ந்து, கூச்சலிட்டும், வாகனத்தில் ஒலி எழுப்பியும் யானையை விரட்டி உள்ளனர். இதனைக் கண்ட மலை கிராம விவசாயிகள் தங்களது பயிர்களை யானைகள் சேதப்படுத்தினாலும் பரவாயில்லை. இது போன்று யானைகளை அச்சுறுத்தும் வகையில் வனத்துறையினர் விரட்ட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, இது போன்று விரட்டுவதால் கோபமடைந்து கிராம மக்களை யானைகள் தாக்கக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in