பயணிகள் நிழற்குடையில் இருந்து குதிக்கும் முதியவர்: வைரலாகும் காணொலி

நிழற்குடையின் மேல் இருந்து குதிக்கும் முதியவர்
நிழற்குடையின் மேல் இருந்து குதிக்கும் முதியவர்

மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடையின் மேல் ஏறி குதிக்கும் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போதையில் குடிமகன்கள் மழை நீரில் டைவ் அடிப்பதும், உயரமான இடங்களில் ஏறி அங்கிருந்து கீழே குதிப்பதும் என பல்வேறு சாகசங்களைச் செய்யும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.

அதுபோன்ற ஒரு காணொலி தற்போது மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொலியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மதுரை விளக்குத்தூண் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையின் மேலே ஏறி, அங்கிருந்து குதிக்க முயல்கிறார். வெள்ளை வேஷ்டி கட்டிய அந்த முதியவர் முதலில் மேலிருந்து கீழே குதிக்க முயன்ற போது அதிர்ஷ்டவசமாக நிழற்குடையிலிருந்து கீழே விழாமல் அதன் மீதே நிலை தடுமாறி விழுகிறார்.

மேலும், இந்த காட்சி எப்போது எடுக்கப்பட்டது? அதில் இருப்பவர் யார்? போதையில் இது போன்று நடந்து கொண்டாரா? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in