பரபரப்பு...ஆணின் தலைமுடியை இழுத்து தாக்கிய பெண்... வைரலாகும் வீடியோ!

தாக்கும் பெண்.
தாக்கும் பெண்.

காணாமல் போன தனது நாயின் போஸ்டரை அகற்றியதற்காக நொய்டாவில் அபாட்மென்ட் சங்க தலைவரை பெண் ஒருவர் தலைமுடியைப் பிடித்து தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சட்டை காலரைப் பிடித்து தாக்குதல்
சட்டை காலரைப் பிடித்து தாக்குதல்

உத்தப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டார் 75-ல் எய்ம்ஸ் கோல்ஃப் அவென்யூ சொசைட்டி உள்ளது. இங்கு வசிக்கும் ஒரு பெண், ஆண் ஒருவரின் தலை முடியைப் பிடித்து இழுத்து தகராறில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாக்குதலுக்கு உள்ளானவர் அந்த அபார்ட்மென்ட் உரிமையாளர் சங்க தலைவர் என்று கூறப்படுகிறது.

காணாமல் போன தனது நாயின் போஸ்டரை அகற்றியதற்காக அபார்ட்மென்ட் உரிமையாளர் சங்க தலைவரை அந்த பெண் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து தகராறு செய்கிறார். பலர் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த வீடியோவில், "அபார்ட்மென்ட் உரிமையாளர்கள் சங்கம் (விஏஓ) உச்ச நீதிமன்றத்தை விட அதிக அதிகாரம் கொண்டதா?" என்று அந்த பெண் கேள்வி எழுப்பியதுடன், சட்டைக் காலரைப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் அதற்கு சங்க தலைவர், மரியாதையுடன் நடந்து கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், ஆத்திரமடைந்த அந்த பெண் சங்க தலைவரை கன்னத்தில் அறைகிறார்.

இந்த வீடியோவிற்கு கடுமையான எதிர்வினைகள் கிளம்பியுள்ளன. பெண் அநாகரிகமாக நடந்து கொண்டதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். " பெண் இவ்வளவு ஆக்ரோஷமாக இருந்திருக்கக் கூடாது. காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று ஒருவரும், “இந்தப் பெண்ணை உடனே கைது செய்ய வேண்டும்” என்று மற்றொரு பயனர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த காணொலி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து நொய்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in