பழுதான மிஷினில் பொருட்களை எடை போடும் ரேஷன் ஊழியர்: வைரலாகும் வீடியோ

பழுதான எடை மிஷின்
பழுதான எடை மிஷின்

நியாய விலைக் கடையில் உள்ள எடை இயந்திரம் பழுதாகி அது எடையை சரியாகக் காட்டாத போதும் கடை ஊழியர், நுகர்வோருக்கு பொருட்களை எடை போட்டு விற்பனை செய்யும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை அடுத்த மேலத்துலுக்கன்குளம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொருட்களை எடை போடும் டிஜிட்டல் எடை இயந்திரம் பழுதடைந்துள்ளது. இதனால், அந்த இயந்திரம் சரியான எடையைக் காட்டாமல், டிஸ்ப்ளே விட்டு விட்டு வந்த வண்ணம் உள்ளது.

இயந்திரம் சரியான எடையைக் காட்டாத போதும், அதனைப் பொருட்படுத்தாத நியாய விலைக் கடை ஊழியர், வாடிக்கையாளர்களுக்கு பழுதான இயந்திரத்திலேயே பொருட்களை எடை போட்டு விற்பனை செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த இயந்திரத்தில் எடை போடப்படும் பொருட்களின் எடை எவ்வளவு என்றே தெரியாத நிலையில் மெத்தனப் போக்குடன் கடை ஊழியர் அனைவருக்கும் பொருட்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in