அழகர்கோயில் மலைப்பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்: விலங்குகள் சாப்பிடும் அதிர்ச்சி வீடியோ

பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்டெருமை
பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்டெருமை

அழகர்கோயில் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளால் சாலை ஓரங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்பகுதியில் உள்ள காட்டெருமை ஒன்று சாப்பிடும் காணொலி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களில் ஒன்றான அழகர்கோயில் மதுரையில் உள்ளது. தினமும் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்லக்கூடிய இங்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் இதர வகையான பிளாஸ்டிக்கள் கொண்டு வரவும், பயன்படுத்தவும் வனத்துறையினர் முற்றிலுமாக தடை விதித்துள்ளனர். இத்தடையையும் மீறி வனப்பகுதிகள் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அழகர்மலைக்கு செல்லும் சாலையோரமுள்ள வனப்பகுதியில் அமர்ந்து உணவு சாப்பிடுபவர்களும், மது அருந்துபவர்களும் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் கழிவுகளை அங்கேயே விட்டுச்செல்கின்றனர். இதுபோன்ற செயல்களால் பிளாஸ்டிக் கழிவுகள் அழகர் மலையின் சாலையோர பகுதிகளில் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இவை சுற்றுச்சூழலை பாதிப்பதோடு, இப்பகுதியில் உலாவரும் காட்டு விலங்குகள் பிளாஸ்டிக் பைகளை சாப்பிடும் அவலம் நேருகிறது.

இந்நிலையில், மதுரை அழகர்கோயில் மலைப்பகுதியில் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை காட்டெருமை ஒன்று சாப்பிடும் வீடியோ சுற்றுலாப்பயணி ஒருவரால் காட்சி படுத்தப்பட்டுள்ளது. அதில், காட்டெருமை ஒன்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தூக்கியெறிந்த பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இத்தகைய சுகாதார சீர்கேடான சூழலை வனத்துறையினரும் கண்டுகொள்ளாத நிலையில், இதுபோன்று மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் சேராத வண்ணம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in