பதற்றத்தை உருவாக்கிய வீடியோ; மீண்டும் சிக்கிய சாட்டை துரைமுருகன்: போலீஸ் அதிரடி

சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்hindu கோப்பு படம்

தென்காசி மாவட்டத்தில் கோயில் நிலப்பிரச்சினை தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்படும் வகையில் பேசியதாக பிரபல யூடியூப்பரான சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

யூடியூப் தளத்தில் சாட்டை துரைமுருகன் பிரபலம் ஆனவர். இவர் தன் வீடியோக்களினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெளியில் வந்தவர். இவர் அண்மையில் தென்காசி மாவட்டம், குறிஞ்சாகுளத்தில் உள்ள கோயில் ஒன்றில் சிலை வைத்தது, நிலம் தொடர்பான பிரச்சினை குறித்து தன் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

ஏற்கெனவே குறிஞ்சாகுளம் பகுதியில் இருதரப்பினருக்கு இடையில் இவ்விசயத்தில் பிரச்சினை சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் இதில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் அங்கு பதற்றமான சூழலுக்கு சாட்டை துரைமுருகனும் துணை செய்வதாக திருவேங்கடம் பகுதியின் கிராம நிர்வாக அலுவலர், சாட்டை துரைமுருகன் மீது போலீஸில் புகார்கொடுத்தார். அதன்பேரில் திருவேங்கடம் போலீஸார் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in