
போதைப்பொருள் மற்றும் மது அருந்துவதைக் காரணம் காட்டி மங்களூருவில் 'தாண்டியா' கொண்டாட்டங்களுக்கு விஎச்பியின் பெண்கள் பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறையிலும் புகார் தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலம், மங்களூரு மாநகர் காவல் ஆணையர் அனுபம் அகர்வால் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத்தின்(விஎச்பி) பெண்கள் பிரிவான துர்கா வாஹினியின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா எழுதியுள்ள கடிதத்தில், நவராத்திரியின் போது நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், " கடந்த ஆண்டு நவராத்திரியின் போது 'தாண்டியா' நடனத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக பல புகார்கள் எழுந்தன. மதநிகழ்வுகளை இவ்வாறு கொண்டாடுவது மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும். அதனால் 'தாண்டியா' கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மங்களூரு நகரின் 23 இடங்களில் 'தாண்டியா' கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு விழா நடைபெறுகிறது. தாண்டியா கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து மாநகர காவல் ஆணையர் அனுபம் அகர்வால் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடந்தது.
இதையும் வாசிக்கலாமே...
சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!
செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!
பிரபல நடிகை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு! திரையுலகில் பரபரப்பு!
நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!
லெஸ்பியன்னு சொல்லு... கெத்தா இருக்கும்; சர்ச்சைக் கிளப்பும் ட்ரைலர்!