நிலவின் அருகில் காட்சியளித்த வெள்ளி கிரகம்: ஆச்சரியத்துடன் கண்டு ரசித்த மயிலாடுதுறை மக்கள்

வெள்ளி கிரகம்
வெள்ளி கிரகம்நிலவின் அருகில் காட்சியளித்த வெள்ளி கிரகம்: ஆச்சரியத்துடன் கண்டு ரசித்த மயிலாடுதுறை மக்கள்

மயிலாடுதுறை அருகே நிலவின் அருகே காட்சியளித்த வெள்ளி கிரகத்தை மக்கள் பார்த்து ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். இரவில் வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. நிலவின் இருண்ட பாகத்திற்கு பின்னால் வெள்ளி கிரகம் மெதுவாக மறைந்து வருவதால் இரண்டும் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. மாலை நேர வானில் உள்ள பிரகாசமான கோள்களி்ல் ஒன்று வெள்ளி என்றாலும், நிலவின் பின்னால் ஒளிவதால் அதன் பிரகாசம் மேலும் 250 மடங்கு உயர்த்தி அழகாக காட்சியளிக்கிறது.

இந்த அரிய வகை நிகழ்வை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்த அரிய வகை நிகழ்வை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

இந்தநிலையில் இதுவரை நடந்திராத அரிய நிகழ்வாக நிலவின் அருகே பிரகாசமாக காட்சியளித்த வெள்ளி கிரகம் நிலவின் இரண்டு பகுதிக்கு பின்னால் சென்று மறைந்தது. இந்த நிகழ்வை உலகின் பல பகுதிகளிலிருந்து காண முடிந்தது. மயிலாடுதுறையில் இந்த அரிய வகை நிகழ்வை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in