இன்று மதியம் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: வேலூர் கலெக்டர் திடீர் அறிவிப்பு

இன்று மதியம் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: வேலூர் கலெக்டர் திடீர் அறிவிப்பு

இன்று மதியம் மற்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுப்பெற்றது. ‘மாண்டஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் காரைக்காலுக்கு 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 620 கி.மீ. தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. தீவிரமெடுக்கும் மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாகத் தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மதியம் மற்றும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in