
ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றி வரும் வேலூர் இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். நேற்று அங்குள்ள சாலையில் அந்த பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது இரண்டு பேர் அவரை பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வேகமாக நடந்து சென்றுள்ளார். அந்த இளைஞர்கள் இரண்டு பேரும் விரட்டிச் சென்று கத்தியை காட்டி மிரட்டி அந்த இளம்பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், காவல் செயலி மூலம் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து சந்தேகத்தின் பெயரை இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இளம்பெண் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.