வேளச்சேரி - தாம்பரம், செங்கல்பட்டு - சென்னை வழித்தடத்துக்கு பிறந்தது விடிவுகாலம்!

வேளச்சேரி - தாம்பரம், செங்கல்பட்டு - சென்னை வழித்தடத்துக்கு பிறந்தது விடிவுகாலம்!

வேளச்சேரி-தாம்பரம், செங்கல்பட்டு- சென்னை புறவழிச்சாலை மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இதனால், பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வந்த வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, புறநகர் பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டன. ஆனால், சிலர் நீதிமன்றம் சென்றதால் இந்தப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில் கடந்த 2011-ம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் போடப்பட்டது. இந்தப் பணி சில மாதங்களே நடந்தது. அப்போது, அமைச்சராக இருந்த ரமணா, இந்த மேம்பாலத்தின் வழியை மாற்றினார். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, மேம்பாலப் பணிகள் பாதியில் நின்றது. கடந்த 9 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இந்த மேம்பாலத்தை கட்டி முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன் பின்னரும் மேம்பாலப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்த தொகுதி எம்எல்ஏவான திமுகவை சேர்ந்த கிருஷ்ணசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் போராட்டம் நடத்திய கிருஷ்ணசாமி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வரோ, உங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான 10 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு எம்எல்ஏக்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

இதனிடையே, கடந்த ஆட்சியில் மேம்பாலப்பணிகள் முடிக்கப்படாமல் இருந்த பணியை தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, வேளச்சேரியில் 78.49 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளச்சேரி மேம்பாலத்தின் வேளச்சேரி புறவழிச்சாலை - வேளச்சேரி - தாம்பரம் சாலை பாலப்பகுதியையும், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் 37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலத்தின் செங்கல்பட்டு - சென்னை வழித்தடப் பாலப்பகுதியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பல மாவட்டங்களில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலப் பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in