கொடைக்கானலுக்கு வாகனங்களில் செல்கிறீர்களா?: சுங்கக்கட்டணம் இன்று முதல் உயர்வு

திண்டுக்கல் கலெக்டர் விசாகன்
திண்டுக்கல் கலெக்டர் விசாகன்கொடைக்கானலுக்கு வாகனங்களில் செல்கிறீர்களா?: சுங்கக்கட்டணம் இன்று முதல் உயர்வு

கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை துறை, சிறு துறைமுகங்கள் துறை அரசு ஆணைப்படி கொடைக்கானல் நகராட்சி எல்கைக்குள் நுழையும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி சுற்றுலா பேருந்துக்கு ரூ.250, பேருந்துக்கு ரூ.150, லாரிக்கு (கனரக வாகனங்களுக்கு) ரூ.100, வேன், மினி, லாரி, டிராக்டர் தலா ரூ.80, சுற்றுலா சிற்றுந்து, வாடகை சிற்றுந்து ரூ.60என வசூலிக்கப்படுகிறது.

அத்துடன் மூன்று சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் இல்லை. இந்த உத்தரவு இன்று முதல் (பிப்.1)அமலுக்கு வருகிறது என திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in