கேரள கோயில் குளத்தில் வசித்த சைவ முதலை மரணம்: நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி

கேரள கோயில் குளத்தில் வசித்த சைவ முதலை மரணம்: நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கோயில் குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த சைவ முதலை நேற்று இரவு உயிரிழந்தது. கும்ப்ளாவில் உள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த முதலைக்கு திங்கள்கிழமை நூற்றுக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கோயிலில் உள்ள அரிசி மற்றும் வெல்லம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டு குளத்தில் சைவ பிராணியாக வாழ்ந்த முதலை, பக்தர்களிடையே ஒரு முக்கிய ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கோயிலில் பூஜைகளுக்குப் பிறகு ஒரு நாளைக்கு இரண்டு முறை பாபியா எனப்படும் இந்த முதலைக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அந்த முதலை வன்முறையாக மாறியதாகவோ பக்தர்களைத் தாக்கியதாகவோ தெரியவில்லை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயிலின் கருவறை படிகளில் முதலை புகுந்தது.

அருகாமையில் ஆறு அல்லது மற்ற நீர்நிலைகள் இல்லாத போது, ​​பெரிய ஊர்வன எப்படி இந்த கோயில் குளத்தை அடைந்தது என்பதைக் குறிக்கும் பதிவுகள் கோயிலில் இல்லை. 1945 ம் ஆண்டில் ஒரு பிரிட்டிஷ் சிப்பாய் ஒரு முதலையை சன்னதியில் சுட்டுக் கொன்றதாகவும், சில நாட்களில் மற்றொரு முதலை கோயிலில் இருந்ததாகவும் கோயில் தகவல்கள் கூறுகின்றன.

அதன் மறைவு குறித்து அறிந்ததும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தனது ட்விட்டர் பக்கத்தில், “அனந்தபுரா ஏரி கோயிலின் கடவுளின் சொந்த முதலை பாபியா விஷ்ணு பாதத்தை அடைந்துள்ளது. தெய்வீக முதலை 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோயிலின் ஏரியில் அனந்தபத்மநாப ஸ்வாமியின் அரிசி மற்றும் வெல்லம் பிரசாதத்தை சாப்பிட்டு கோயிலைக் காத்து வந்தது" என தெரிவித்துள்ளார்

திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள பத்மநாபாவின் (விஷ்ணு) மூலஸ்தானம் இந்தக் கோயில் என்று நம்பப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in