பிறந்தநாளில் வெஜிடபிள் பிரியாணி: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விருந்து படைத்த தலைமை ஆசிரியை

பிறந்தநாளில் வெஜிடபிள் பிரியாணி: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விருந்து படைத்த தலைமை ஆசிரியை

பிறந்தநாளுக்கு பள்ளியில் பயிலும் 215 குழந்தைகளும் உணவு சமைத்து சாப்பிட வைத்து மகிழ்ந்துள்ளார் அரசு பள்ளி தலைமை ஆசிரியை.

கோவை மாவட்டம், கல்வீரம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மகாலட்சுமி. இன்று இவரது பிறந்த நாள். இதை தனது பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கொண்டாடும் விதமாக அவர் அனைவருக்கும் மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி சமைத்து எடுத்து வந்து உடன் சாப்பிட்டு மகிழ்ந்தார்.

தனது பள்ளி மட்டும் இல்லாது அருகில் உள்ள ஐஓபி காலனி மாநகராட்சி பள்ளியில் பயிலும் 40 குழந்தைகளுக்கும், கல்வீரம்பாளையம் அரசு அங்கன்வாடிக்கு வரும் 25 குழந்தைகளுக்கும் உணவு சமைத்து வழங்கினார். கூடவே, கல்வீரம்பாளையம் அரசு பள்ளிக்கு மாணவர்கள் பயன்பாட்டுக்காக தண்ணீர் ட்ரம்களை இன்று வழங்கினார். கடந்த 12 ஆண்டுகளாக, இதை தொடர்ச்சியாக செய்து வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in