ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு: தடை விதிக்கக்கோரிய மனுவிற்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை  விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு:  தடை விதிக்கக்கோரிய மனுவிற்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

நெல்லையைச் சேர்ந்த முத்துராமன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிப்காட் வழங்கிய நிலத்தை விற்கவோ, வேறு நிறுவனங்களுக்கு மாற்றவோ சிப்காட் நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெற வேண்டும். வேதாந்தா நிறுவனம் அவ்வாறு எந்த அனுமதியும் பெறவில்லை. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை விற்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர், ‘மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனுதாரர் உரிய அமைப்பிடம் மனு செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in