பரபரக்கும் காவிரி விவகாரம்! மீண்டும் போராட்டம் அறிவித்த வாட்டாள் நாகராஜ்

வாட்டாள் நாகராஜ்
வாட்டாள் நாகராஜ்
Updated on
1 min read

தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை எதிர்த்து வரும் 10-ம் தேதி கர்நாடகா - தமிழக எல்லையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட அமைப்பை சேர்ந்த வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். 

கர்நாடகா – தமிழ்நாடு காவிரி பிரச்சினை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்துக்கு பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இதனிடையே, கன்னட அமைப்பினரின் போராட்டத்தால் பெங்களூரு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான போக்குவரத்து தடைப்பட்டது. இந்நிலையில் நேற்று வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் பெங்களூருவில் இருந்து கேஆர்எஸ் அணையை முற்றுகையிட வாகனங்களில் சென்றனர்.

அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், வரும் 10-ம் தேதி தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அன்றைய தினம் கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் போராட்டம் தீவிரமாக நடத்தப்பட உள்ளதாகவும், கர்நாடகாவுக்காகவும், கன்னட மொழிக்காவும் இன்னும் ஏராளமான போராட்டங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in