`நீங்க கேட்ட பணத்துடன் வருகிறேன்'- லஞ்ச ஒழிப்புத்துறையினருடன் வந்து வி.ஏ.ஓ-வை அதிரவைத்த நபர்

கைது
கைது

தூத்துக்குடி மாவட்டம், சிதம்பராபுரம் வி.ஏ.ஓ பட்டா மாறுதல் தொடர்பாக 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கைதான வி.ஏ.ஓ வேலாயுதப் பெருமாள்
கைதான வி.ஏ.ஓ வேலாயுதப் பெருமாள்

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள கே.சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன். இவர் தன்னுடைய நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக சப் டிவிஷனுக்காக இணைய வழியில் விண்ணப்பித்து இருந்தார். இதுதொடர்பாக கே.சிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசப் பெருமாளை அணுகினார். அவரோ, சப் டிவிஷன் செய்வதற்காக 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பணத்துடன் வருவதாகச் சொல்லிச் சென்ற ராகவன் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரசாயனம் தடவிய 14 ஆயிரம் ரூபாயை ராகவனுக்குக் கொடுத்தனர். தொடர்ந்து அருகிலேயே இன்னொரு இடத்தில் மறைந்திருந்தனர். கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசப் பெருமாள் லஞ்சப் பணத்தை வாங்கியதும், அங்குவந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஹக்டர் தர்மராஜ், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சுதா ஆகியோர் தலைமையிலான குழுவினர் வி.ஏ.ஓ வெங்கடேசப் பெருமாளைக் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in