புயலால் வீழ்ந்த மரங்கள்: மூடப்பட்ட வண்டலூர்,கிண்டி பூங்காக்கள்

புயலால் வீழ்ந்த மரங்கள்: மூடப்பட்ட வண்டலூர்,கிண்டி  பூங்காக்கள்

'மேன்டூஸ்' புயல் எதிரொலி காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை இன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மேன்டூஸ்' புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்தது. புயல் கரையைக் கடந்த போதிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவைகளும் பாதிப்படைந்துள்ளன.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இயங்கும் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பராமரிப்பு காரணமாக இன்று ஒருநாள் மட்டும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுபோல் கிண்டி சிறுவர் பூங்காவிற்கும் இன்று மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in