அதானி, அம்பானியை விட எனது நேரத்தின் மதிப்பு அதிகம்: பாபா ராம்தேவ் பரபரப்பு

ராம்தேவ்
ராம்தேவ்The Hindu

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் 99 சதவீத நேரத்தை சுயநலத்திற்காக பயன்படுத்துகின்றன, அதே சமயம் துறவியின் நேரம் அனைவரின் நலனுக்காகவே உள்ளது என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

கோவாவின் பனாஜியில் நேற்று முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் முன்னிலையில், அவரது உதவியாளர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுக்கு நடந்த பாராட்டு விழா நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசினார். அப்போது, "நான் ஹரித்வாரில் இருந்து மூன்று நாள் நிகழ்ச்சிக்காக இங்கு வந்துள்ளேன். அதானி, அம்பானி, டாடா, பிர்லா ஆகியோரை விட எனது நேரத்தின் மதிப்பு அதிகம். கார்ப்பரேட் நிறுவனங்கள் 99 சதவீத நேரத்தை சுயநலத்திற்காக செலவிடுகின்றன, அதேசமயம் துறவியின் நேரம் அனைவரின் நலனுக்காகவே உள்ளது" என்று அவர் கூறினார்.

பால்கிருஷ்ணா தனது தொழில்முறை நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகத்திறன் மற்றும் பொறுப்புணர்வின் காரணமாக, நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த பதஞ்சலி நிறுவனத்தை இந்த நிதியாண்டில் ரூ. 40,000 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாற்றியதற்காக அவரைப் பாராட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in