உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் யு.யு.லலித்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் யு.யு.லலித்!

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் 49வது இந்திய தலைமை நீதிபதியாக யு.யு. லலித் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கார், முன்னாள் இந்திய தலைமை நீதிபதி என்.வி ரமணா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். புதிதாக பெறுப்பேற்றுள்ள உதய் உமேஷ் லலித் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக செயல்பட்டு நவம்பர் 8ம் தேதியுடன் ஓய்வுப் பெறவுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957ம் ஆண்டு பிறந்த யு.யு.லலித் 1983ம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார்.

நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் அரசு வழக்கறிஞராக செயல்பட்டவர் யு.யு.லலித். வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், அதன்பின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்ட 2வது நபர் இவர் ஆவார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in