உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித்: விடைபெறும் நாளில் முக்கிய வழக்குகளில் தீர்ப்பு!

டி.ஒய்.சந்திரசூட் உடன் யு.யு.லலித்
டி.ஒய்.சந்திரசூட் உடன் யு.யு.லலித்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான உதய் உமேஷ் லலித் ஓய்வு பெறுவதை முன்னிட்டு, அவர் தலைமையிலான அமர்வு இன்று 6 வழக்குகளில் தீர்ப்பு வழங்குகிறது.

யு.யு.லலித் இந்திய உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக ஆகஸ்ட் 27 அன்று பொறுப்பேற்றார். 74 தினங்கள் பணியாற்றிய நிலையில் நாளையுடன்(நவ.8) அவர் ஓய்வு பெறுகிறார். குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை என்பதால், கடைசி வேலைநாளான இன்றுடன் விடைபெறுகிறார். இதனையொட்டி இன்று பிற்பகல் லலித் தலைமையிலான சிறப்பு அமர்வு உச்ச நீதிமன்றத்தில் கூடுகிறது. இதில் அடுத்த தலைமை நீதியாக பொறுப்பேற்க உள்ள டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட நீதிபதிகள் பங்கேற்கின்றனர்.

விடைபெறும் நாளில் யு.யு.லலித் 6 வழக்குகளில் தீர்ப்பு வழங்குகிறார். தொடர்ந்து தலைமை நீதிபதி விடைபெறும் வைபவம் நடக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தின் வாயிலாக நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட உள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு உட்பட 2 முக்கிய வழக்குகளும், ஏனைய சாதாரண வழக்குகளும் இந்த தீர்ப்பில் அடங்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in