புல்லட்டில் வந்து மின்னல் வேகத்தில் திருடும் பெண்கள்: சிசிடிவியை வைத்து போலீஸ் காட்டிய அதிரடி

புல்லட்டில் வந்து மின்னல் வேகத்தில் திருடும் பெண்கள்: சிசிடிவியை வைத்து போலீஸ் காட்டிய அதிரடி

உசிலம்பட்டி பகுதியில் முகவரி விசாரிப்பது போல் நடித்து மூதாட்டிகளிடம் நகையை பறித்து புல்லட்டில் தப்பிச் சென்ற பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் இரண்டு பெண்கள் வாலிபர் ஒருவருடன் புல்லட்டில் வந்து முகவரி கேட்பது போல் நடித்து பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கரன் தலைமையில் தனிப்படையினர் நகைப் பறிப்பு கும்பலை தேடி வந்தனர். வீடியோ காட்சி பதிவுகளின் அடிப்படையிலும் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திண்டுக்கள் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்த தர்மர்(32), மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த சரோஜா(36), பிரவீனா (32) ஆகியோர் விக்கிரமங்கலம் காவல்துறையினடம் சிக்கினர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், உசிலம்பட்டி, இடையபட்டி, துமம்மக்குண்டு, நரியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புல்லட்டில் தினமும் வந்துள்ளனர்.

அப்போது, பெண்கள் தனிமையில் இருந்தால் அவர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்பது போலவும், முகவரி கேட்பது போலவும் நடித்து அவர்கள் கழுத்தில் கிடக்கும் நகைகளை பறித்து கொண்டு புல்லட்டில் மின்னலாய் செல்வதும் தெரியவந்தது. இவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 6 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இவர்கள் வழிப்பறி செய்த நகைகளை யாரிடம் எல்லாம் விற்றனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in