2022 மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் அமெரிக்க இளம்பெண்!

2022 மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் அமெரிக்க இளம்பெண்!

2022-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்’ போனி கேப்ரியல் வென்றுள்ளார்.

அமெரிக்காவின் லூசியானாவில் 71-வது ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 84 நாடுகளைச் சேர்ந்த 86-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் இந்தியா சார்பில் மங்களூருவை சேர்ந்த 25 வயதான திவிதா ராய் பங்கேற்றார். இதில் டாப் 16 அழகிகளில் ஒருவராக அமெரிக்காவைச் சேர்ந்த போனி கேப்ரியல் 2022-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

60 லட்சம் மதிப்பிலான நீலக்கல் பதிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ் கிரீடம் அணிவிக்கப்பட்டு அவர் கெளரவிக்கப்பட்டார். கடந்த முறை பட்டம் வென்ற இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து, புதிய மிஸ் யூனிவர்ஸாக தேர்வாகி உள்ள ரபோனி கேப்ரியலுக்கு பட்டம் சூட்டினார்.

இரண்டாவது இடத்தை 23 வயதான வெனிசுலா அழகி அமண்டா டுடாமெல் பிடித்தார். மூன்றாவது இடத்தில் டொமினிக்கன் குடியரசை சேர்ந்த ஆண்ட்ரீனா மார்டினஸ் பிடித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in